மதுக்கரை காவல் ஆய்வாளருக்கு பதிலாக நேர்மையான அதிகாரியை பணியமர்த்தக் கோரி ம.தி.மு.க. மனு

கோவை : மதுக்கரை காவல் ஆய்வாளர் மாவட்ட செயலாளர் போல் செயல்படுவதாகவும், அவருக்குப் பதிலாக நேர்மையான அதிகாரியை பணியமர்த்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் மனு அளித்துள்ளார்.


கோவை : மதுக்கரை காவல் ஆய்வாளர் மாவட்ட செயலாளர் போல் செயல்படுவதாகவும், அவருக்குப் பதிலாக நேர்மையான அதிகாரியை பணியமர்த்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ம.தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் மனு அளித்துள்ளார். 

ம.தி.மு.க மாநில இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளிக்க வந்திருந்தார். தேர்தல் பணிகளில் ஆட்சியர் ஈடுபட்டிருப்பதால், அவரது நேர்முக உதவியாளரிடம் மனு அளித்துச் சென்றார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- மதுக்கரை காவல் ஆய்வாளர் தூயமணி ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர் போல் நடந்து கொள்கிறார். தேர்தல் நேரம் என்பதால் அவரை மாற்றி நேர்மையான அதிகாரியை அங்கு பணியமர்த்த வேண்டும், என குறிப்பிட்டிருந்தார். 

இது குறித்து அவர் கூறுகையில், "தற்போது மதுக்கரை காவல் ஆய்வாளராகப் பொறுப்பேற்று உள்ள தூயமணி, இதற்கு முன்பு பேரூர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் இங்கு பொறுப்பேற்றுக் கொண்டார். ஆளுங்கட்சிக்கு சாதகமாக ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். மேலும், பொதுக் கூட்டங்களை நடத்த மனு அளிக்கப்பட்டால், கடைசி வரை இழுத்தடித்து அனுமதி மறுப்பதோடு, அங்கு புகார் அளிக்க வருபவர்களை தரக்குறைவாகவும், ஒருமையிலும் பேசுகிறார். தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறி வருகிறார். 

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளும் இவரை மாற்றி, வேறு ஒரு நியாயமான அதிகாரியை அங்கு பணியமர்த்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் இல்லாத காரணத்தால் மனுவை ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனுவை அளித்து உள்ளோம். உரிய நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் எடுக்க வேண்டும், என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...