பொள்ளாச்சியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : தி.மு.க. பிரமுகரின் மகன் போக்ஸோ சட்டத்தில் கைது

கோவை : வால்பாறையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தி.மு.க. பிரமுகரின் மகனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை : வால்பாறையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தி.மு.க. பிரமுகரின் மகனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ரவி என்கிற காக்கா ரவி. இவர் முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரவேலுவின் உதவியாளராக இருந்திருக்கிறார். இவரது மகன் கவின் (17) வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்த நிலையில், கவின் வால்பாறை பகுதியில் வசித்து வரும் கூலித் தொழிலாளி ஒருவரின் மகளான 2-ம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர், இந்த சம்பவம் தொடர்பாக கவினின் பெற்றோரிடம் நியாயம் கேட்டுள்ளனர். ஆனால், இந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது என்று சிறுமியின் குடும்பத்தினரை கவினின் தந்தை காக்கா ரவி மிரட்டியுள்ளார். இருப்பினும், அவரது மிரட்டலுக்கு அஞ்சாத சிறுமியின் தாய், பொள்ளாச்சி மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்தப் புகாரின் அடிப்படையில், கவின் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார். 

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி, பிறப்புறுப்பு உள்பட பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...