36 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு மருதமலை வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ அணைப்பு

கோவை : மருதலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் 36 மணிநேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கோவை : மருதலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் 36 மணிநேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரமான மருதமலைக்கு அருகே உள்ள பட்டா நிலங்ததில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ படிப்படியாக, அருகே உள்ள வனத்துறையினருக்கு சொந்தமான வனப்பகுதிக்கும் வேகமாக பரவியது. இது குறித்து அறிந்த வனத்துறையினர் மற்றும் தடாகம் மற்றும் துடியலூர் பகுதிகளைச் சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் மதியம் ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ நள்ளிரவு வரையிலும் கொளுந்து விட்டு எரிந்தது. இதனை வனத்துறையினரும், தன்னார்வலர்களும் போராடி கட்டுக்குள் கொண்டு முயற்சி செய்தனர். இந்த நிலையில், 36 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு தீ இன்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தப் பணியில் ஈடுபட்ட அனைவரையும் கோவை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு #C4TN உறுப்பினர்கள் உணவு, டார்ச் லைட் மற்றும் பவர் பேங்க் போன்றவற்றை வழங்கினர்.

இதனிடையே, நீலகிரி பையோஸ்பியர் நேட்சர் பார்க் அருகே உள்ள ஆனைகட்டி மலையில் உள்ள தெக்கலூர் வனப்பகுதியில் இன்று காலை திடீரென காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனை அணைக்கும் பணியில் வனத்துறை ஊழியர்களும், தன்னார்வலர்களும் போராடி வருகின்றனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...