நீலகிரி : கோடை சீசனை முன்னிட்டு வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் நீலகிரி சிறப்பு மலைரயில் இயக்கப்படுவதாக சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகை மலை ரயில் தினந்தோறும் காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து கிளம்பி 12.30 மணிக்கு உதகை சென்றடைகிறது. அதேபோல, உதகையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடைகிறது. இதை தவிர குன்னூரிலிருந்து உதகைக்கு 4 முறை ரயில் இயக்கப்படுகிறது.
இந்த நிலையில், கோடை சீசனை முன்னிட்டு, வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஜூன் 29-ம் தேதி வரை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மட்டும் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதாக சேலம் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயிலில் 132 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து புறப்படும் இந்த சிறப்பு மலை ரயில், மதியம் 2.30 மணிக்கு உதகை சென்றடைகிறது. இந்த சிறப்பு மலை ரயில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.