மேட்டுப்பாளையம் தொகுதி தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து சிறப்பு பயிற்சி

கோவை : மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மண்டல அளவிலான தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திர இயக்கம் குறித்து சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டது.

கோவை : மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மண்டல அளவிலான தேர்தல் அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திர இயக்கம் குறித்து சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டது. 



 நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தற்போதைய கணக்கெடுப்பின்படி, மொத்தம் 2,76,484 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க இப்பகுதி 29 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மொத்தம் 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. இந்த வாக்குச்சாவடிகள் அனைத்திற்கும் தனித்தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு தணிக்கை இயந்திரம் ஆகியவற்றைக் கொண்டு தேர்தல் அதிகாரிகள் நேரிடையாக விளக்கி பயிற்சியளித்தனர்.

குறிப்பாக, புதிதாக இணைக்கப்பட்டுள்ள வாக்காளர்கள், தங்களது வாக்கைப் பதிவு செய்த பின்னர், அந்த வாக்கு யாருக்கு பதிவாகியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் வகையில், அருகில் உள்ள இயந்திரத்தில் அதற்கான ஆதார சீட்டு ஏழு நொடிகள் வரை தெரியும். அதன் பின்னர், அச்சீட்டு அந்த இயந்திரதினுள்ளே விழுந்து விடும். அதற்குள் வாக்காளரை சரி பார்த்துக்கொள்ள அறிவுறுத்த வேண்டும் என மாதிரி இயந்திரம் மூலம் விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் புனிதா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...