கெடிமேடு பி.ஏ.பி. வாய்க்கால் பாலப்பகுதியில் உள்ள சாலையை ஆய்வு செய்த கோவை ஆட்சியர்

கோவை : பொள்ளாச்சி கெடிமேடு பிரதான கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த நிலையில், வாய்க்கால் பாலப்பகுதியிலுள்ள சாலையினை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கோவை : பொள்ளாச்சி கெடிமேடு பிரதான கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த நிலையில், வாய்க்கால் பாலப்பகுதியிலுள்ள சாலையினை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி இன்று ஆய்வு மேற்கொண்டார். 



கோவை மாவட்டம், பொள்ளாச்சி பி.ஏ.பி வாய்க்கால் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி இன்று விபத்து ஏற்பட்ட பாலத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்த விபத்து குறித்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். 

தொடர்ந்து, விபத்து ஏற்பட்ட இப்பகுதியில் காவல்துறையின் மூலம் வேகத்தடுப்புகள் அமைக்கவும், நெடுஞ்சாலைத்துறையின் மூலம் பாலம் குறித்த கூடுதலான எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கவும், கூடுதல் எதிரொளிப்பான்கள் பாலம் அருகில் பொருத்தவும், சிறிய அளவிலான வேகத்தடுப்புகள் அமைக்கவும், உள்ளாட்சி துறையின் மூலம் பாலத்தின் இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கும் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. 

அதோடு, ரூ. 99.11 லட்சம் மதிப்பீட்டில் 7.50 மீட்டர் அகலமுள்ள இப்பாலத்தினை 12.90 மீட்டர் அகலப்படுத்துவதற்கான உத்தரவும், மற்றும் நிதி ஒதுக்கீடு வரப்பெற்ற நிலையில், பி.ஏ.பி வாய்க்காலில் நீர்வரத்து நின்றவுடன் வருகின்ற ஜுன் முதல் வாரத்தில் பாலத்தினை அகலப்படுத்தும் பணியினை நெடுஞ்சாலைத்துறை துரிதமாக மேற்கொள்ளவேண்டும் என்றும், இவ்வழியாகப் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் குறைந்த வேகத்திலும், கவனமுடன், வாகனங்களை இயக்குமாறு மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி அறிவுறுத்தினார்.

 

இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் செல்வக்குமார், உதவி கோட்டப்பொறியாளர் மல்லிகா, பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் உதவி செயற்பொறியாளர் குப்புசாமி, பொள்ளாச்சி காவல் துறை துணை கண்காணிப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...