கோவை : மதுக்கரை அருகே தனியாருக்கு சொந்தமான பழைய பொருட்கள் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தினை தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.

மதுக்கரை பகுதியில் காதர் மற்றும் ஜபருல்லா ஆகியோருக்கு சொந்தமான எஸ்.கே.ஆர் என்ற பழைய பொருட்கள் வைக்கும் குடோன் உள்ளது. இதற்கு அருகே உள்ள முட்புதரில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீ படிப்படியாக பக்கத்தில் உள்ள குடோனுக்கும் பரவியது. இதில், குடோனில் மரப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்பட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. மேலும், உள்ளே இருந்த கணினி மற்றும் உதிரி பாகங்களும் தீயில் கருகி சேதமடைந்தன. இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.