கோவை தேர்தல் களம் 2018: நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவையில் போட்டியிடும் பி.ஆர்.நடராஜன் குறித்த ஒரு சிறிய அறிமுகம்

கோவை மக்களவை தொகுதியில் சிபிஎம் வேட்பாளராக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான தோழர் பி.ஆர்.நடராஜன் (வயது 68) அவர்கள் 2019 நாடாளுமன்ற தேர்தலில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.


கோவை மக்களவை தொகுதியில் சிபிஎம் வேட்பாளராக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான தோழர் பி.ஆர்.நடராஜன் (வயது 68) அவர்கள் 2019 நாடாளுமன்ற தேர்தலில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

பி.ஆர்.நடராஜன் அவர்கள் கல்லூரியில் இளம்கலை பட்டப்படிப்பு படிக்கும்போதே அரசியலில் ஈர்க்கப்பட்டு இந்திய மாணவர் சங்க தலைவராக பொருப்பேற்று மாணவர்களின் உரிமைக்கான போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். இதனைத்தொடர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவராக பொருப்பேற்று இளைஞர்களின் உரிமைக்காக களம் கண்டவர்.

1968ல் மார்க்சிஸ்ட் கட்சியில் தன்னை இனைத்துக்கொண்டார். கோவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தொழிற்சங்க தலைவர் கே.ரமணி அவர்களின் மூத்தமகள் வனஜா அவர்களை திருமணம் செய்தார். இத்தம்பதிகளுக்கு ஆர்த்தி, அருணா என்ற இரு மகள்கள் உள்ளனர். 

கட்சியின் மாநகர செயலாளராகவும், மாவட்ட செயலாளராக 10 ஆண்டுகளும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி உள்ளார். கட்சியின் முழுநேர ஊழியராக 1977 முதல் 42 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காகவும், கோவை மாவட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக தொடர்ந்து தலையீட்டை செலுத்துபவராகவும், கோவை மக்களின் அன்பைபெற்றவராகவும் பி.ஆர்.நடராஜன் திகழ்கிறார்.

துப்புரவு தொழிலாளர் சங்கத்திலும், ஹோட்டல் தொழிலாளர் சங்கத்திலும் மாவட்ட தலைவராக பொருப்பேற்று தொழிலாளர்களின் உரிமைக்காக திறம்பட பணியாற்றி உள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய ஐந்தாண்டுகளில் கோவை ரயில்நிலையத்தை தரம் உயர்த்தவும், 11 ரயில்களை அறிமுகம், கோவை ரயில்நிலையத்தில் நிற்காமல் நேராக பாலக்காடு சென்ற ரயில்களை கோவை ரயில்நிலையத்தில் நின்று செல்ல முயற்சி எடுத்து அதில் வெற்றி கண்டார். இதானல் கோவை மாவட்ட தொழில்துறையினர் அமைப்பு, வர்த்தகர் அமைப்பு மற்றும் கேரள மாநில மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

கோவை ரயில் நிலையத்தில் இரண்டாவது சுரங்கப்பாதை, எஸ்கேலட்டர் மற்றும் லிப்ட் வசதி இவரின் காலத்திலேயே நடைபெற்றது. பாரதியார் பல்கலை கழகம் அமைய நிலம் வழங்கியவர்களுக்கான இழப்பீடு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இவரின் எடுத்த முயற்சியின் பயனாகவே முதல் தவனை 42 கோடி ரூபாய் நிலம் கொடுத்த மக்களுக்கு பெற்றுத்தரப்பட்டது.

800 கோடி செலவிலான இஎஸ்ஐ மருத்துவ கல்லூரி அமையவும், கரும்பு ஆராய்ச்சி நிலைய ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணிநிரந்திரம் தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்கள் மற்றும் அரசு அச்சக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றை பெற்றுத்தந்தார்.

நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தபோது தொகுதி வளர்ச்சி நிதியாக ஒதுக்கப்பட்ட 19 கோடி ரூபாயையும் முழுமையாக தொகுதி மக்களின் வளர்ச்சிகாக சமூக நலக்கூடங்கள், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மேம்பாடு ஆகியவற்றிற்காக செலவு செய்யப்பட்டது.

இவரின் காலத்திலேயே கோவை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசல் குறித்து அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டு நாடாளுமன்றத்தில் பேசி சுமார் 8 பாலங்களுக்கு ஒப்புதல் பெற்று இவரின் காலத்திலேயே ஐந்து பாலங்கள் பணி நிறைவுற்று போக்குவரத்து நெரிசலுக்கு ஓரளவிற்கு தீர்வு காணப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தொழிலாளர் நலத்துறை, தகவல் தொழில் நுட்பம், தொழில்துறை ஆகியவற்றின் நிலைக்குழு உறுப்பினராகவும், பெட்ரேலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...