கோவை : நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

நாம் தமிழர் கட்சிக்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்திருந்தது. எனவே, கடந்த முறை ஒதுக்கப்பட்டிருந்த இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தையே அவர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரியிருந்தார். ஆனால், இந்த முறை இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் மேகலாயாவில் உள்ள கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டதால், வேறு சின்னத்தை தேர்வு செய்யுமாறு நாம் தமிழர் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்திருந்தது. இதில், 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு வழங்கப்படும் எனவும் உறுதியளித்திருந்தார். ஆனால், நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மட்டுமே பெண் வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே, வரும் 19-ம் தேதி சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற இருக்கும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சி, தனது சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.