கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சபரி ராஜன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சபரி ராஜன் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக இன்று மூன்றாவது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலில் ஆனைமலை அருகே உள்ள பண்ணை வீட்டில் சோதனை நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக நேற்று மாக்கினாம்பட்டி பகுதியில் உள்ள திருநாவுக்கரசு வீட்டில் சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று பொள்ளாச்சி ஜோதி நகர் பகுதியில் உள்ள சபரி ராஜன் வீட்டில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது. இங்கிருந்து முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.