கோவையில் பறக்கும் படையினரால் உரிய ஆவணமில்லாத ரொக்கம், பொருட்கள் பறிமுதல்

கோவை : கோவை மாவட்டத்தில் பறக்கும் படையினரால் முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கம், மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டத்தில் பறக்கும் படையினரால் முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் ரொக்கம், மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி, இந்தியத் தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி, முறையான ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும், ரொக்கம் மற்றும் பொருட்கள் தேர்தல் பறக்கும்படை அலுவலர்களால் கண்காணித்து பறிமுதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டம் முழுவதும் முழு அளவிலான 24 மணிநேரமும் செயல்படும் வகையில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு. ராசாமணி பேசியதாவது :- கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கும் வண்ணம், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 குழுக்கள் வீதம் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு பறக்கும் படையில், 30 குழுக்களும், நிலையான கண்காணிப்புக் குழுவில் 30 குழுக்களும், 24 மணி நேர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காணொலி கண்காணிப்புக்குழுவில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 2 குழுக்கள் வீதம் மொத்தம் 20 குழுக்கள் பொது கூட்டம் மற்றும் பேரணி நடைபெறும் பகுதியில் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

பறக்கும் படையில் குழுத்தலைவரின் கீழ், 5 அலுவலர்கள் வீதம் 30 குழுவில் 180 அலுவலர்களும், நிலையான கண்காணிப்புக்குழுவில் குழுத்தலைவரின் கீழ், 4 அலுவலர்கள் வீதம் 30 குழுவில் 150 அலுவலர்களும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019 அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் தேர்தல் விதிகளுக்குப் புறம்பாக, உரிய ஆவணங்களின்றி ரூ. 50,000க்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள், அந்தந்த தொகுதிகளுக்கென நியமிக்கப்பட்டுள்ள பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் கைப்பற்றப்பட்டு, தொடர்புடைய கருவூலங்களில் ஒப்படைக்கப்படும். உரிய ஆவணங்களின்றி ரூ.10,00,000- க்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம் வருமான வரி துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நபரின் கணக்குகள் சரிபார்க்கப்பட்டு, வருமான வரி துறையினரின் பரிந்துரையின்படி, மாவட்ட கண்காணிப்புக் குழுவினரால் மேற்கொண்டு தொகை விடுவிக்கப்படும்.

தேர்தல் நடைமுறை அமுலுக்கு வந்த பின் கோவை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 13) வரை எவ்வித ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட தொகை ரூ. 3,00,000, பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை அணி-2-னாலும், தொகை ரூ. 2,47,500 வால்பாறை சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை அணி-1-னாலும் சோதனையின் போது கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட சார்நிலை கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் சமர்ப்பித்த பின் மாவட்ட கண்காணிப்புக்குழுவின் பரிந்துரையின்படி விடுவிக்கப்படும். 

மேலும், இன்று மாலை பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனைமலை, காளியாபுரம் பகுதியில் 354 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்ட முழுவதிலும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...