சென்னை : பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்புவதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரின் பேரில், ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன்னைப் பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் தி.மு.க.வினர் பரப்புவதாகவும், கட்சியின் மீதும், தன் மீதும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக ஸ்டாலினின் மருமகன் சபரீஷன் உள்பட தி.மு.க.வினர் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவதாக பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை காவல்நிலையத்தில் புகார் மனு அளித்திருந்தார். இதனடிப்படையில், ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.