குன்னூர் டி.டி.கே. சாலையோரப் புதர்களில் திடீர் தீ விபத்து : சுமார் ஒரு மணிநேரம் போராடி அணைப்பு

நீலகிரி : குன்னூர் டி.டி.கே. சாலை பகுதியில் உள்ள புதர்களில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தை தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

நீலகிரி : குன்னூர் டி.டி.கே. சாலை பகுதியில் உள்ள புதர்களில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தை தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.

குன்னூரில் கடந்த மாதம் காணப்பட்ட பனிப்பொழிவிற்குப் பின், வனங்களில் புற்கள், செடிகள் கருகி காட்டுத்தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது, பனிப்பொழிவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன் காரணமாக, வனங்களில் புற்கள், செடிகள் கருகத் துவங்கியுள்ளன. வறட்சி அதிகரித்துக் காட்டுத் தீ அபாயம் ஏற்பட்டுள்ளதால் வன விலங்குகள், உணவு தேடி குடியிருப்புக்குள் வருவது அதிகரித்துள்ளது. வறட்சியால் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க, வனப்பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைத்து, தீ தடுப்பு காவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், குன்னூர் டி.டி.கே. சாலைப் பகுதியில் காய்ந்த செடிகளில் திடீரென தீப்பிடிக்கத் தொடங்கியது. அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் இருக்குமாறு, குன்னூர் தீயணைப்பு நிலைய அதிகாரி ஆர். மோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...