பொள்ளாச்சி வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகப் புகார் அளிக்கலாம் : சி.பி.சி.ஐ.டி.,

கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகளிடம் நேரடியாகப் புகார் அளிக்கலாம் என்றும், புகார் அளிக்கப்படும் பெண்களின் ரகசியம் காக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி., அறிவித்துள்ளது.


கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகளிடம் நேரடியாகப் புகார் அளிக்கலாம் என்றும், புகார் அளிக்கப்படும் பெண்களின் ரகசியம் காக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி., அறிவித்துள்ளது. 

 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கு கோவை - அவிநாசி சாலையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என சி.பி.சி.ஐ.டி., அறிவித்துள்ளது. மேலும், அவ்வாறு புகார் அளிக்கும் பாதிக்கப்பட்ட பெண்களின் ரகசியம் காக்கப்படும். புகார் தெரிவிக்க விரும்பும் பெண்கள் 94884-42993 என்ற எண்ணிலோ, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது கோவை - அவிநாசி சாலையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேரிடையாகவோ புகார் மற்றும் தகவல்களை அளிக்கலாம். மேலும், இந்த வன்கொடுமை சம்பவம் குறித்த தகவல்களை பொதுமக்களும் தெரிவிக்கலாம். 

வழக்கின் முக்கியத்துவம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி வழக்குத் தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம், இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...