எந்த நேரமும் காவல் விசாரணைக்கு நான் ஆஜராக தயார் : கோவையில் பார் நாகராஜ் பேட்டி

கோவை : தேவை இல்லாத அவதூறுகளை தன் மீது பரப்ப வேண்டாம் என்றும், எந்தநேரமும் காவல் விசாரணைக்கு நான் ஆஜராக தயார் என கோவையில் ஆட்சியர் அலுவலகம் அருகே செய்தியாளர்களை சந்தித்த பார் நாகராஜ் தெரிவித்துள்ளார்.


கோவை : தேவை இல்லாத அவதூறுகளை தன் மீது பரப்ப வேண்டாம் என்றும், எந்தநேரமும் காவல் விசாரணைக்கு நான் ஆஜராக தயார் என கோவையில் ஆட்சியர் அலுவலகம் அருகே செய்தியாளர்களை சந்தித்த பார் நாகராஜ் தெரிவித்துள்ளார். 

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரிராஜன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இருப்பினும், குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனையை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், அரசியல் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பார் நாகராஜ், பெண் ஒருவரை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட்டது போன்ற வீடியோ வெளியாகியது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த பார் நாகராஜ், அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை, ஏற்கனவே பாலியல் வழக்கில் கைதான சதீஷ் எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். 

இந்த நிலையில், தனக்கும் இந்த பிரச்சனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்க பார் நாகராஜ் வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களை சந்தித்தார். 



செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :- சமூக வலைதளங்களில் வலம் வரும் வீடியோ தன்னுடையது அல்ல. செய்திகளில் நான் தலைமறைவாக இருப்பதாக ஒளிபரப்பப்படுகிறது. இதனால், எனது குடும்பம் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளது. நான் நடத்தி வந்த டாஸ்மாக் பாரை கடந்த 8 மாதங்களுக்கு முன்பே விற்று விட்டேன். மேலும், தேவை இல்லாத அவதூறுகளை என் மீது பரப்ப வேண்டாம். எந்த நேரமும் காவல் விசாரணைக்கு நான் ஆஜராக தயார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளிக்க வந்துள்ளேன், என்றார். 

இதைத் தொடர்ந்து, பார் நாகராஜ் மற்றும் அவரது தாயார் பேபியும் தனித் தனியாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...