நீலகிரி : உதகையில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி : உதகையில் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பாலாடா பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில் உள் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரின் மகள் 11ஆம் வகுப்பு மாணவி ஷாவிழி என்பவரும் பயின்று வந்தார்.

இந்த நிலையில், அவர், இரவு பள்ளி வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உதகை கிராமப்புற டி.எஸ்.பி. சங்கு தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.