மைனர் பெண்ணை பலாத்காரம் செய்தவரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுங்கள் : காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

கோவை : மைனர் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை : மைனர் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையினருக்கு மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் ரம்யா தேவி. 17 வயது மாணவியான இவரை அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான தண்டபாணி என்பவர் கடந்த ஜனவரி மாதம் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. உடனடியாக இது குறித்து மாணவியின் பெற்றோர், தங்களது மைனர் பெண்ணை, உறவுக்காரரான தண்டபாணி என்பவர் கடத்தி சென்று விட்டதாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ரம்யா தேவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி டெல்லிக்கு கடத்தி சென்ற தண்டபாணி அங்கு அவரை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். பின்னர், சேலத்தில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். 



அப்போது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி ரம்யா தேவி, சேலத்தில் இருந்து தப்பித்து மேட்டுப்பாளையம் வந்துள்ளார். தனது பெற்றோரிடம் தான் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டதையும், தண்டபாணி தன்னை அடித்து துன்புறுத்தியதையும், அவரின் பிடியில் இருந்து தப்பித்து வந்ததையும் ரம்யா தேவி கூறியுள்ளார். இதனையடுத்து, மாணவியினை அழைத்துக்கொண்டு மேட்டுப்பாளையம் காவல்நிலையம் சென்ற அவரது பெற்றோர் இது குறித்து விரிவான புகார் மனு அளித்துள்ளனர். ஆனால், இப்புகார் மீது கடந்த ஒரு மாதமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. 

இதனால், ஏமாற்றமடைந்த ரம்யா தேவி மற்றும் அவரது பெற்றோர் இன்று மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜராகி நடந்த சம்பவங்கள் குறித்து மனு அளித்தனர். இதனை விசாரித்த மேட்டுப்பாளையம் நீதிபதி சரவணபாபு, உடனடியாக ரம்யா தேவியின் புகார் மீது நடவடிக்கை எடுக்கவும், மைனர் பெண்ணை கடத்திச்சென்று பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கிய நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டார். 

இதனையடுத்து, ரம்யா தேவி மற்றும் அவரது பெற்றோர் கோவை துடியலூரில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் தண்டபாணி மீது புகார் அளித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...