தேயிலை விவசாயிகளின் கனவை நினைவாக்குமா கோடை மழை..? : தேயிலை மகசூல் அதிகரிக்கும் என நம்பிக்கை

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக, தேயிலை செடிகளில் துளிர் விட தொடங்கியுள்ளது. இருப்பினும், கோடை மழை தொடர்ந்து பெய்தால் மட்டுமே விளைச்சல் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக, தேயிலை செடிகளில் துளிர் விட தொடங்கியுள்ளது. இருப்பினும், கோடை மழை தொடர்ந்து பெய்தால் மட்டுமே விளைச்சல் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

நீலகிரியில் தேயிலை விவசாயம் நலிவடைந்தாலும், கிடைக்கும் விலையைப் பெற்றுக்கொண்டு, பொருளாதார நெருக்கடியிலும் அத்தொழிலை நம்பிதான், 65 சதவீதம் விவசாயிகள் பிழைப்பு நடத்தி வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளைக் காட்டிலும், நடப்பாண்டில் ஏற்பட்ட கடும் பனிப்பொழிவால், பல்லாயிரம் ஏக்கர் தேயிலை தோட்டங்கள் கருகிப் பாதிக்கப்பட்டது. மலை காய்கறி தோட்ட விவசாயிகளுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக, கூட்டுறவு தொழிற்சாலை, தனியார் தொழிற்சாலைகளில் இலை வரத்து வரலாறு காணாத அளவுக்கு குறைந்தது. 



தற்போதைய நிலவரப்படி, மாவட்டத்தில் இலை வரத்து கணிசமான அளவு குறைந்த காரணத்தினால், பெரும்பாலான தனியார் தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சொற்ப அளவிலான தொழிற்சாலைகளில், வாரத்திற்கு ஒரு முறை தேயிலை தூள் உற்பத்தி நடந்து வருகிறது. கூட்டுறவு தொழிற்சாலையைப் பொறுத்தவரையில், தினசரி கொள்முதல் அளவால் உற்பத்தி செலவினங்களை தாக்குப்பிடிக்க முடியாமல், நான்கு நாட்களுக்கு ஒரு முறை உற்பத்தி நடக்கிறது. 

இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சரிவர வேலை ஏதும் கிடைக்காததால், கட்டிட பணி உள்ளிட்ட பிற பணிகளை தேடி மற்றப்பகுதிகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.

மாவட்டத்தில் நிலவிய பனியின் தாக்கம், இம்மாதம் தொடக்கம் முதல் சற்று குறைய தொடங்கி உள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக, குன்னூர் குந்தா சுற்றுவட்டாரப் பகுதியில், இரண்டு முறை மழை பெய்தது. இந்த மழை இன்னும் ஓரிரு முறை பெய்தால் தேயிலை செடிகளுக்கு ஈரப்பதம் ஏற்பட்டு, மகசூல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக விவசாயிகள் கருதுகின்றனர். தேயிலை தோட்டங்களுக்கு மழை தொடர்ந்து பெய்ய வேண்டியதில்லை. அவ்வப்போது பெய்யும் கனமழைக்கு நல்ல ஈரப்பதத்துடன், வெயில் தென்பட்டால் இலை வரத்து படிப்படியாக அதிகரித்து விடும் என்பதால் மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...