கோவை : சர்வதேச அளவிலான காமன்வெல்த் யூத் 2019 விருது கோவையைச் சேர்ந்த 'நோ வேஸ்ட் ஃபுட்' அமைப்பின் நிறுவனர் பத்மநாபன் கோபாலனுக்கு வழங்கப்பட்டது.
கோவை : சர்வதேச அளவிலான காமன்வெல்த் யூத் 2019 விருது கோவையைச் சேர்ந்த 'நோ வேஸ்ட் ஃபுட்' அமைப்பின் நிறுவனர் பத்மநாபன் கோபாலனுக்கு வழங்கப்பட்டது.
உலகம் முழுவதும் தொழில்முனைவோர், புதுமையை அறிமுகப்படுத்தியவர்கள், சமூக ஆர்வலர்கள் என 16 பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் காமன்வெல்த் யூத் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 30-வது காமன்வெல்த் யூத் விருது வழங்கும் விழா இன்று லண்டனில் நடைபெற்றது. 45 நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் இந்த விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். அவர்களில் விருதிற்கு தேர்வானவர்கள் பட்டியல் கடந்த வாரம் இறுதி செய்யப்பட்டது. அதில், இந்தியாவில் இருந்து 2 பேருக்கு காமன்வெல்த் யூத் 2019 விருது வழங்கப்பட்டது.
அதாவது, பள்ளி உள்பட கல்வி நிறுவனங்களின் மூலமாக, மின்சாரங்களில் இருந்து பாதுகாத்து கொள்ளும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் காந்தி அமைப்பின் நிறுவனர் சாய் வெங்கட சத்யா கேதர் இல்லாவும், உலகம் முழுவதும் பசியை போக்க வேண்டும் என்ற குறிக்கோளில் செயல்பட்டு வரும் கோவையைச் சேர்ந்த 'நோ வேஸ்ட் ஃபுட்' அமைப்பின் நிறுவனர் பத்மநாபன் கோபாலன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 'நோ வேஸ்ட் ஃபுட்' அமைப்பின் நிறுவனர் பத்மநாபன் கோபாலன் காமன்வெல்த் யூத் 2019 விருதைப் பெற்றார். இந்த விருதை தன்னுடன் சேர்ந்து பணியாற்றும் தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அர்ப்பணிப்பதாக அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.