கோவை : மேட்டுப்பாளையம் அருகே 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த வன காவல் தெய்வமான கருப்பண்ணசாமி கோவில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம் வனப்பகுதியினை ஒட்டியுள்ள கிராமமாகும். வனம் சூழ்ந்த இந்தப் பகுதியில் சுமார் 200 ஆண்டுகளாக வனத்திற்கும், ஊர் மக்களுக்கும் காவல்தெய்வமாக விளங்கும் அருள்மிகு கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இன்று புதியதாக பத்தரகாளியம்மன், காமாட்சி அம்மன் சிலைகள் மற்றும் கருப்பண்ணசாமி குதிரை வாகன சிலைகள் அமைக்கப்பட்டு, அதற்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

நேற்று இரவு முதல் ஜந்துக்கும் மேற்பட்ட சிவாச்சாரிகள் கலந்து கொண்டு வேத, மந்திரங்கள் முழங்க ஒன்று மற்றும் இரண்டு கால வேள்விகள் நடத்தப்பட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர், அந்த வேள்வியில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீர் இன்று யாக சாலையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுரத்தின் உச்சியில் உள்ள கலசங்களுக்கும், புதியதாக பிரதிஷ்டை செய்த சுவாமி சிலைகளுக்கும் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவை சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் திருப்பள்ளி எழுச்சி பாடி, மங்கள இசை முழங்க விமான கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனையடுத்து, புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கருப்பண்ணசாமி மற்றும் பத்தரகாளியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் மலைவாழ் மக்களும் கலந்துகொண்டனர்.