நீலகிரி : உதகையில் ஊருக்குள் புகுந்துள்ள கரடி, சாலைகளில் செல்லும் மக்களை விரட்டி அட்டகாசம் செய்து வருகிறது.
நீலகிரி : உதகையில் ஊருக்குள் புகுந்துள்ள கரடி, சாலைகளில் செல்லும் மக்களை விரட்டி அட்டகாசம் செய்து வருகிறது. எனவே, அதனை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடும் வறட்சி காரணத்தால் தண்ணீர், உணவு தேடி வன விலங்குகள் குடியிருப்பு பகுதியில் வந்து செல்கிறது. இந்த நிலையில், உதகை நகரத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் கரடி ஒன்றை, நாய்கள் விரட்டி செல்வதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இருப்பினும், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே கரடி கட்டிடங்கள் மீது ஏறியும், அப்பகுதியில் இருந்த மக்களை விரட்டியும் அச்சுறுத்தி வந்தது. பின்னர், மார்க்கெட் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் பதுங்கி உள்ளது.

கரடியை பிடிக்க கால்நடை மருத்துவர்கள் இன்னும் சம்பவ இடத்திற்கு வராததால், அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கும், மார்க்கெட் பகுதியில் மக்கள் நடப்பதற்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.