சிறுமுகையில் காட்டு யானையை வேட்டையாட முயன்ற 4 பேருக்கு மூன்று ஆண்டு சிறைதண்டனை

கோவை : மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானையை வேட்டையாட முயன்றதாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு மூன்று ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

கோவை : மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானையை வேட்டையாட முயன்றதாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு மூன்று ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. 



கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட ஓடந்துறையில் கற்கள் மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, தேனி மாவட்டத்தை சேர்ந்த எம். சென்ட்ராயன், யு. சிவா, பி. குபேந்திரன் மற்றும் பி. சிங்கம் ஆகியோர் காட்டு யானையை வேட்டையாட முயன்றனர். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இதையடுத்து, கோவை மாவட்ட துணை வனப் பாதுகாவலர் சி. தினேஷ் தலைமையிலான வனத்துறையினர், குற்றவாளிகள் நால்வரையும் கைது செய்து, நீதிமன்ற காவலில் வைத்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு மேட்டுப்பாளையம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எம். சென்ட்ராயன், யு. சிவா, பி. குபேந்திரன் மற்றும் பி. சிங்கம் ஆகியோருக்கு தலா ரூ. 10,000 அபராதமும், 3 ஆண்டு சிறைதண்டனையும் விதித்து நீதிபது உத்தரவிட்டார். அதுமட்டுமில்லால், தமிழ்நாடு வனத்துறையினர் சட்டத்தின்படி, தலா 6 மாத சிறையும், ரூ. 500 அபராதமும் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நால்வரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கோவை வனத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...