திருப்பூரில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த வடமாநிலத்தவர்கள் கைது : 250 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருப்பூர் : திருப்பூரில் புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 250 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர் : திருப்பூரில் புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 250 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் ஆம்னி வேன் பறிமுதல் செய்யப்பட்டது.



திருப்பூர் பி.என்.ரோடு பகுதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் புகையிலை பொருட்களை குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின் பேரில், அனுப்பர்பாளையம் போலீசார், பிச்சம்பாளையம் நால்ரோட்டில் உள்ள ஒரு மளிகைக் கடையில் சோதனை நடத்தினார்கள். அப்போது , பொம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் சம்பந்தப்பட்ட குடோனிற்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கோவை மாவட்டம் சோமனூரில் இருந்து புகையிலை பொருட்களை ஆம்னி வேனில் ஏற்றி வந்து குடோனில் பதுக்கி வைத்து கடை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. 



இதுதொடர்பாக போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லீலாராம், கோபால்சிங் ஆகிய 2 பேரை கைது செய்ததோடு, குடோனில் பதுக்கி வைத்திருந்த 250 கிலோ புகையிலை பொருட்களையும், விற்பனைக்கு பயன்படுத்தி வந்த ஆம்னி வேன் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...