பொள்ளாச்சி அருகே கால்வாயில் கார் கவிழ்ந்த விபத்தில் இரு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி

கோவை : பொள்ளாச்சி - திண்டுக்கல் சாலையில் தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு கால்வாயில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில், இரு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : பொள்ளாச்சி - திண்டுக்கல் சாலையில் தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு கால்வாயில் கார் கவிழ்ந்து விழுந்த விபத்தில், இரு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 



பொள்ளாச்சி - திண்டுக்கல் சாலையில் உள்ள கெடிமேடு என்ற பகுதியில் பி.ஏ.பி. கால்வாய் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று அதிகாலை அந்த சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு கால்வாயில் பாய்ந்துள்ளது. இதனைக் கண்ட அந்த வழியில் சென்ற பொதுமக்கள் உடனடியாக பொள்ளாச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள், காரில் இருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, காரில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்ற விபரம் தெரியாத நிலையில், முதலில் பெண் ஒருவரின் சடலம் மட்டுமே கண்டெடுக்கப்பட்டது. பின்னர், மேலும் பலர் இந்த விபத்தில் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அதில், 3 பெண்கள், 2 குழந்தைகள், ஒரு ஆண் என 6 பேரின் சடலம் தற்போது மீட்கப்பட்டது. இவர்கள், கோவை மசக்காளி பாளையத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் எனத் தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர்கள், பிரகாஷ், சித்ரா, பூஜா, சுமதி, லதா மற்றும் தரணி என அடையாளம் காணப்பட்டுள்ளது. 



இதேபோல, இந்த கால்வாயில் கடந்த 2017-ம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 5 பேருடன் வந்த கார் கவிழ்ந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மிகக் குறுகலான இந்த சாலையில் தொடர்ந்து விபத்துகள் நடந்து கொண்டே இருப்பதால், விபத்துகள் நடக்காத வண்ணம், சாலையை விரிவுபடுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...