பொள்ளாச்சியில் வன்கொடுமை சம்பவத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட தி.மு.க. முயற்சி : பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு

கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட தி.மு.க. முயற்சிப்பதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் மூலம் அரசியல் ஆதாயம் தேட தி.மு.க. முயற்சிப்பதாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம்சாட்டியுள்ளார். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் உள்பட ஏராளமான இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, மிரட்டி பணத்தைப் பறித்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும், அவரது மகனுக்கும் தொடர்பிருப்பதாக சமூக வலைதளங்களில் குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. மேலும், குற்றவாளிகளைக் காப்பாற்ற அ.தி.மு.க., முயற்சி செய்து வருவதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில், கட்சியின் மீதும், தன் மீதும் களங்கம் ஏற்படுத்துவதற்காகவே, பொள்ளாச்சி வன்கொடுமை விவகாரத்தில் தன்னையும் தனது மகனையும் தொடர்புப்படுத்தி தி.மு.க., பேசுவதாகவும், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, தி.மு.க. விதிகளை மீறி சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவதாக, சென்னையில் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹுவிடம் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகார் மனு ஒன்றை இன்று அளித்துள்ளார். 

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது :- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என்னைப் பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். கட்சியின் மீதும், தன் மீதும் களங்கம் ஏற்படுத்துவதற்காகவே, இந்த சம்பவத்தில் தன்னையும், தனது மகனையும் தொடர்புப்படுத்தி தி.மு.க.வினர் பேசுகின்றனர். மேலும், ஸ்டாலினின் மருமகன் சபரீஷன் உள்பட தி.மு.க.வினர் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தி.மு.க.வினருக்கே முக்கிய பங்கு இருக்கிறது. 

இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் கடந்த மாதமே வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால், அப்போது, உரிய ஆதாரம் இருந்தும் சி.பி.சி.ஐ.டி.,க்கு விசாரணைக்கு மாற்ற தி.மு.க. வலியுறுத்தவில்லை. தற்போது, அரசியல் ஆதாயம் தேடுவதற்காக தி.மு.க., இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. 

பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் என்னை நேரில் அணுகினர். இதன்மூலம், இந்த சம்பவத்தை வெளிக் கொண்டு வந்ததே நான்தான். குற்றவாளிகளைப் பிடிக்க பொள்ளாச்சி ஜெயராமன்தான் உதவினார் என பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரே கூறுகின்றனர். இருப்பினும், தேர்தலைக் கருத்தில் கொண்டு, தி.மு.க.வினர் இந்த விவகாரத்தை வேறு விதமாக திசைதிருப்புகின்றனர். மேலும், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, விதிகளை மீறி சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை தி.மு.க. பரப்பி வருகிறது, எனக் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...