கோவை : நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கோவை மக்களவை தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடவுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17-வது மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக, கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு பற்றியும் தமிழகத்தின் முன்னணி கட்சிகள் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வுகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன.
கோவையைப் பொறுத்தவரையில், போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாத நிலையில், தி.மு.க. சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவது உறுதியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. அக்கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட, முன்னாள் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர், கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் சி.பி.ஐ.(எம்) சார்பில் கோவையில் போட்டியிட்டார். அத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் ஆர்.பிரபுவை பின்னுக்கு தள்ளியதோடு, 25.19% வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். ஆனால், 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெறும் 2.91% சதவிகித ஓட்டுகள் மட்டுமே வாங்கியவர், 5வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டார்.
மேலும், கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணனின் பெயரும் பரீசலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.