தமிழக பா.ஜ.க., வேட்பாளர்களின் பெயர்கள் 4 அல்லது 5 தினங்களில் இறுதி செய்யப்படும் : கோவையில் முரளிதர ராவ் அறிவிப்பு

கோவை : தமிழகம் உட்பட தென்னிந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.க., வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் 4 அல்லது 5 தினங்களில் இறுதி செய்யப்படும் என கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் தெரிவித்தார்.


கோவை : தமிழகம் உட்பட தென்னிந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.க., வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் 4 அல்லது 5 தினங்களில் இறுதி செய்யப்படும் என கோவையில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் தெரிவித்தார். 

புலியகுளம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் பா.ஜ.க., இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பா.ஜ.க தேசிய செயலாளர் முரளிதர ராவ் கோவை வந்தார். 

அப்போது, காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :- தேசிய ஐனநாயக கூட்டணி, இந்தியாவில் மிகப்பெரிய, வலுவான கூட்டணியாக உள்ளது. கூட்டணி தொடர்பாக கேரளாவில் இடதுசாரிகளும், காங்கிரசும் சண்டை போட்டுக்கொண்டு இருக்கின்றனர். இந்தியாவில் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தலைவர் இல்லை. இந்திய ஜனநாயக கூட்டணியில் மட்டுமே மோடி தலைவராக உள்ளார். 

வருகிற 23, 24-ம் தேதிக்கு முன்னர் இந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.க. வேட்பாளர்கள் உறுதி செய்யப்படுவார்கள். தமிழகம் உட்பட தென்னிந்தியா முழுவதும் வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் 4 அல்லது 5 தினங்களில் இறுதி செய்யப்படும்.

தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதி மட்டுமில்லாது, அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. கட்சியின் தேசிய, மாநில தலைவர்கள் பிரச்சாரம் செய்வார்கள், என்றார். 

மேலும், உங்கள் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- ஒரு குடும்பத்திற்கு உள்ளேயே வேறுவேறு கருத்து வேறுபாடுகளுடன் இருப்பார்கள். அதேபோல தான் கூட்டணி கட்சிகளும். 

பொள்ளாச்சி விவகாரத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசை வலியுறுத்தி உள்ளோம். இந்த விவகாரத்தில் உரிய நீதி கிடைக்கும் என நம்புகிறோம். அ.தி.மு.க.வினர் நடவடிக்கை எடுத்து கொண்டு இருக்கின்றனர். தொடர்ந்து நடவடிக்கை எடுப்பார்கள், இவ்வாறு கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...