கோவை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து எம்.பி. கனிமொழி தலைமையில் தி.மு.க. சார்பில் திருவள்ளுவர் திடலில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் உள்பட இளம்பெண்களுடன் முகநூலில் நட்புறவாகப் பழகி, அவர்களை ஆபாசமாக படம்பிடித்து, பணத்தை மிரட்டி வசூலித்து வந்த குற்றவாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில், பாலியல் வழக்கில் புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை மிரட்டிய வழக்கில் கைதான பார் நாகராஜ் உள்பட 4 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்தது.
இதைத்தொடர்ந்து, பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இன்று மாலை ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொள்கின்றனர். ஆனால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நேற்று வருவாய்த்துறை அனுமதி அளித்த நிலையில், பின்பு இன்று மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க., எம்.பி. கனிமொழி, "பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கிலிருந்து யாரையோ காப்பாற்றும் நோக்கில் காவல்துறை செயல்படுகிறது. தடையை மீறி பொள்ளாச்சியில் இன்று மாலை தி.மு.க., சார்பில் போராட்டம் நடைபெறும்," என்றார்.