நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் 400 ஊர்களில் வசிக்கும் படுகர் இன மக்களின் உப்புஹட்டுவ பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இப்பண்டிகையின் போது வீட்டிலிருந்து ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து உப்பு, பச்சை கடலை, புல் வகைகள் என கொண்டு வந்து ஆற்றில் கரைத்து, அதிலிருந்து தண்ணீரை மாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட கல்லில் ஊற்றி மாடுகளுக்கு தண்ணீரை கொடுப்பார்கள். மேலும், அனைவரும் இயற்கை தெய்வத்தை வழிபட்டு பின்பு காடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட கவட்டை இலை, நெறி செடிகளை வீட்டிற்கு கொண்டு செல்வார்கள். அதை வீட்டின் முற்றத்தில் செடிகளை தொங்கவிடுவர். வீட்டில் இருப்பவர்களுக்கு நோய் நொடி இல்லாமல் இருக்க அந்த செடிகள் இருக்கும் என ஐதீகம். மேலும், மாடுகளுக்கு உப்பு தண்ணீர் குடிப்பதால், அது மேய்சலுக்கு எங்கு சென்றாலும் வீட்டுக்கு வரும் என நம்பிக்கையில், நிலகிரியில் உள்ள 400 கிராமங்களில் வசிக்கும் படுகர் இன மக்கள் சார்பில் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும், வீட்டில் பாயாசம் வைத்து ஊர் பொதுமக்களை கூப்பிட்டு, ஒவ்வொரு வீட்டிலும் கொடுப்பார்கள். இதனால், படுகர்களின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில், இந்தப் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.