வன வறட்சியால் தாகத்தில் தவிக்கும் காட்டுயிர்கள் : செயற்கை நீராதாரங்களை உருவாக்கி வரும் வனத்துறை

கோவை : போதிய மழையின்றி வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால், லாரிகள் மூலம் காடுகளுக்குள் தண்ணீர் கொண்டு சென்று வன உயிரினங்களின் தாகம் தீர்க்க வனத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.

கோவை : போதிய மழையின்றி வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால், லாரிகள் மூலம் காடுகளுக்குள் தண்ணீர் கொண்டு சென்று வன உயிரினங்களின் தாகம் தீர்க்க வனத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை உள்ளிட்ட வனச்சரக பகுதிகளில் புலி, யானை, கரடி, சிறுத்தை, காட்டுமாடுகள் மற்றும் மான்கள் என பல்வேறு வன உயிரினங்கள் உள்ளன. குறிப்பாக, இவ்வனப்பகுதி யானைகளின் முக்கிய வழித்தடப்பாதை என்பதால் ஏராளமான யானைகள் நடமாடி வருகின்றன. இந்த நிலையில், கடந்தாண்டு இப்பகுதியில் பெய்ய வேண்டிய பருவ மழையின் அளவு வெகுவாக குறைந்து போனதால், மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அடர்ந்த வனத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்தால் வனத்தில் இருந்த நீரோடைகள், வனக்குட்டைகள் என வன உயிரினங்களின் தாகம் தீர்க்கும் அனைத்து இயற்கை நீராதாரங்களும் வறண்டு வருகின்றன. இதனால், வனவிலங்குகள் தண்ணீர் தேடி அலையும் சூழல் நிலவுகிறது. ஒரு யானை உயிர்வாழ நாளொன்றுக்கு குறைந்தபட்சம் இருநூறு லிட்டர் தண்ணீர் தேவை என்ற நிலையில், காடுகளுக்குள் போதிய நீரின்றி யானைகள் பரிதவித்து வருகின்றன. காட்டில் நீர் கிடைக்காத நிலையில், வனத்தை விட்டு வெளியேறி நீரைத்தேடி அருகில் உள்ள கிராமங்களுக்குள் யானைகள் புகும் வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. 



இதனை கருத்தில் கொண்டு செயற்கையான முறையில் லாரிகளில் தண்ணீரை காடுகளுக்குள் எடுத்து சென்று வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் முயற்சியில் சிறுமுகை வனத்துறை இறங்கியுள்ளது. குஞ்சப்பனை, வில்வமரக்காடு, பெத்திக்குட்டை, ஓடந்துறை என அடர்ந்த வனத்தின் எல்லையில் வனத்துறையால் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், செயற்கையான கசிவு நீர் குட்டைகளை அமைத்து, அதில் போர்வெல் மற்றும் பவானி ஆற்று நீரை திருப்பி தண்ணீர் நிரப்பவும் முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கும் சிறுமுகை வனத்துறையினர், இதனால் வன உயிரினங்களின் தாகத்தை தீர்ப்பதோடு, தண்ணீர் தேடி ஊருக்குள் நுழையும் யானைகளை தடுத்து மனித விலங்கின மோதலையும் கட்டுப்படுத்தலாம், என்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...