Breaking : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் : திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை : பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டல் விடுத்து வந்த கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு மீது குண்டர் சட்டம் பய்ந்தது. எஞ்சிய 3 பேரை இன்று மதியத்திற்குள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



கோவை : பொள்ளாச்சியில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டல் விடுத்து வந்த கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு உள்பட 4 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் முகநூல் மூலம் கல்லூரி மாணவிகளை குறிவைத்து பழகி ஆபாச படம் எடுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட சதீஷ், சபரி ராஜன், மற்றும் வசந்தகுமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசையும் சில நாட்களில் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியின் பரிந்துரையின் பேரில், இந்த பாலியல் வன்கொடுமை வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு மீது இன்று குண்டர் சட்டம் பாய்ந்தது. இதைத் தொடர்ந்து, எஞ்சிய சதீஷ், சபரி ராஜன், மற்றும் வசந்தகுமார் ஆகிய 3 குற்றவாளிகள் குற்றவாளிகளும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான தகவலை கோவை மாவட்ட எஸ்.பி. பாண்டியராஜன் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...