நீலகிரி : நீலகிரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பறக்கும் படை குழுக்கள், உரிய ஆவணமின்றி பணம் கடத்தப்படுகிறதா என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விடிய வடிய வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வருகின்ற மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் ஓராண்டு வரை தண்டனை என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக உரிய ஆவணங்கள் இன்றி கணக்கில் வராத பணப் பறிமாற்றம் குறித்து தாசில்தார் தலைமையில் 5 பேர் கொண்ட பறக்கும் படை வீரர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர்.

இவர்கள் ஒரு தொகுதிக்கு 3 ஷிப்ட் வீதம் காலை 7 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை தொடர்ந்து வாகனங்ளை கண்காணித்து வருகின்றனர். அதில், ஏதாவது பணம் கடத்தப்படுகிறதா என்ற கோணத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்
இது குறித்து வட்டாட்சியர் கண்ணதாசன் கூறும்போது :- உரிய ஆவணங்கள் இன்றி 50,000 மேல் பணம் எடுத்து வரப்பட்டால், அவற்றை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். அதிகாரிகளுக்கு தேவையான சான்றுகளை வழங்கினால் மட்டுமே வழங்கப்படும், என தெரிவித்துள்ளார்.