கோவையில் தேர்தல் பணிக்காக 90 பறக்கும் படைகள் அமைப்பு : மாவட்ட தேர்தல் அதிகாரி

கோவை : மக்களவை பொதுத்தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தலைமையில் நடைபெற்றது.



கோவை : மக்களவை பொதுத்தேர்தலுக்காக 90 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, தேர்தல் பணிகளுக்காக முடுக்கி விடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கு. ராசாமணி தெரிவித்தார்.

17-வது மக்களவை தேர்தல் மற்றும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தலைமையில் அரசியல் கட்சியினருடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது.



கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பேசியதாவது :- தேர்தலுக்கான அனைத்து நிலைகளிலும் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. தேர்தல் நடைமுறைக்கு அனைத்து கட்சியினர் ஒத்துழைப்பு தருவார்கள் என நம்புகிறேன். நன்னடத்தை விதிகளை ஏற்று அனைவரும் நடக்க வேண்டும். மேலும், அரசியல் கட்சி விளம்பரங்கள் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகம் இருக்கக் கூடாது. தேர்தல் பணிக்காக பறக்கும் படை அமைக்கப்பட்டு 8 மணிநேர அடிப்படையில், 90 குழுக்கள் பணியைத் தொடங்கி விட்டது. மேலும், 50,000-க்கும் மேல் பணம் கொண்டு செல்பவர்கள் முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் பறிமுதல் செய்யப்படும்.



அரசு வாகனங்கள், உயர் அதிகாரிகளின் வாகனங்கள், ஆம்புலன்ஸ் என எதில் சந்தேகம் இருந்தாலும் சோதனையிடப்படும். கோவை மாவட்டத்தில் உள்ள 3,072 வாக்குச் சாவடிகளில் 470 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. 117 வாக்குச்சாவடிகள் மிகபதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. காந்தியடிகள், திருவள்ளுவர், அம்பேத்கர் சிலைகளைத் தவிர மற்ற சிலைகள் மறைக்கப்படும் அல்லது அகற்றப்படும். தேர்தல் தொடர்பான புகார்களை 1950 என்ற எண்ணில் அளிக்கலாம். வேட்புமனு தாக்கல் நடைபெறும் வரை புதிய வாக்காளர் சேர்க்கை நடைபெறும். சமூக வலைதளங்களை கண்காணிக்கத் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகளில் பெய்டு நியூஸ் குறித்தும் கண்காணிக்கப்படும். பதற்றமான, மிக பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். 

தமிழக - கேரள எல்லைகளில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து இரு மாநில அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணிக்கு கோவை மாவட்டத்தில் 13 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும், கோவை மாவட்டத்தில் புதிதாக 178 வாக்குச் சாவடிகள் சேர்க்கப்பட்டுள்ளது, என்றார். 

இந்த பேட்டியின் போது, கோவை மாநகராட்சி துணை ஆனையர் பிரசன்ன ராமசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஸ்நேகா ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...