தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது தெரியாமல் மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம்

கோவை : தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது தெரியாமல், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கோவை : தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது தெரியாமல், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கமான ஒன்று. இந்த நிலையில், 17-வது மக்களவை தேர்தல் மற்றும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை முதலே நன்னடைத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால், தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் நேற்று அறிவித்தது.

இந்த நிலையில், இதனை அறியாமல் பொதுமக்கள் சிலர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்க வந்திருந்தனர். தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது உங்களுக்கு தெரியுமா..? என கேட்டபோது, தொலைக்காட்சி மற்றும் செய்தி தாள்கள் மூலம் அறிந்தோம். ஆனால், மனு கொடுத்தால் பெற மாட்டார்கள் என்பது தெரியாது எனவும், எப்போது இனி மனுவை வாங்குவார்கள் என பரிதாபமாக நம்மிடம் திருப்பி கேட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சர் படங்கள், பிளக்ஸ் பேனர்கள், அரசியல் தொடர்பான போஸ்டர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...