கோவை : உக்கடம் அருகே உள்ள போக்குவரத்து கழக பணிமனையில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உக்கடம் அருகே தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டத்திற்கு சொந்தமான பணிமனை உள்ளது. இந்த பணிமனை 2ல் காரமடை பகுதியைச் சேர்ந்த கணபதி (56) என்பவர் கிளீனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் இன்று அதிகாலை பேருந்திலிருந்து இருந்து டயர்களை இறக்கி கொண்டிருந்தார். அப்போது, பேருந்தில் இருந்த டயர்கள் அவர் மீது விழுந்தது. இதில், படுகாயமடைந்த தொழிலாளியை உடன் பணி செய்பவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், இதயப் பகுதி மற்றும் நுரையீரல் பகுதிகளில் அவருக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், தொழிலாளி உயிரிழந்ததற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் எனவும், மேலும் முறையான பராமரிப்பு பொருட்கள் ஏதும் இல்லாதது ஆபத்தை நோக்கியது எனவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல, இறந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என்பதுடன் தொழிலாளிகளின் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் தொழிலாளர் தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
பணியின் போது தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது கோவை போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.