கோவை: கோவையில் இருசக்கர வாகனத்தில் வரும் 2 இளைஞர்கள் இருசக்கர வாகனங்களிலிருந்து பெட்ரோல் திருடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கோவை: கோவையில் இருசக்கர வாகனத்தில் வரும் 2 இளைஞர்கள் இருசக்கர வாகனங்களிலிருந்து பெட்ரோல் திருடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
கோவை சேரன் மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் பிரபு. இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த மாதம் 17-ஆம் தேதி மதிய நேரத்தில், வழக்கம் போல வீட்டின் வெளியே இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். பின்பு வெளியே கிளம்புவதற்காக இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்யும் பொழுது இரு சக்கர வாகனம் ஸ்டார்ட் ஆகவில்லை. இதையடுத்து கணேஷ் பிரபு தனது இருசக்கர வாகனத்தை ஆராய்ந்தபோது வாகனத்திலிருந்த பெட்ரோல்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கணேஷ் பிரபு தனது வீட்டில் உள்ள கண்காணிப்பு படக்கருவியைப் பரிசோதனை செய்து பார்த்தார்.
அதில் நூதனமாக பெட்ரோல் திருடும் இளைஞர்கள் முதற்கட்டமாக டியூபை பிடுங்கி அதில் வாட்டர் கேன்-ஐ வைத்து விட்டுச் சென்று விடுகின்றனர். பின்னர் சிறிது நேரம் ஆனவுடன் பெட்ரோல் நிரம்பியதும் மீண்டும் அந்த பெட்ரோல் திருடும் இளைஞர்கள் ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் பெட்ரோல் கேனை எடுத்துச் சென்று விடுகின்றனர். இந்த காட்சிகள் கண்காணிப்பு படக்கருவியில் தெளிவாகப் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், இந்த காட்சிகள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இவ்வாறு, வருங்கால இளைஞர்கள் ஒரு சிலர் தற்போது நூதனமாகத் திருடுவதில் தங்கள் திறமைகளைக் காட்டி வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.