பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ஒருவாரத்திற்குள் விடுதலை செய்ய வாய்ப்பு : எம்.எல்.ஏ., தனியரசு நம்பிக்கை

கோவை : பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் ஒரு வார காலத்திற்குள் விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக கோவையில் நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் தனியரசு நம்பிக்கை தெரிவித்துள்ளார்


கோவை : பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் ஒரு வார காலத்திற்குள் விடுதலை செய்ய வாய்ப்புள்ளதாக கோவையில் நடைபெற்ற மனிதசங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினர் தனியரசு நம்பிக்கை தெரிவித்துள்ளார்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி இன்று பல்வேறு இடங்களில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள நஞ்சப்பா சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில், த.பெ.தி.க., சி.பி.ஐ., அ.ம.மு.க., வி.சி.க., தி.வி.க., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



அப்போது, 7 பேரை விடுதலை செய்யக்கோரி பறையடித்து முழக்கங்களை எழுப்பினர்.மேலும், தமிழக அமைச்சரவை தீர்மானப்படி, தமிழக ஆளுநர் காலதாமதம் செய்யாமல் விடுதலை கோப்பில் கையெழுத்திட வேண்டுமென வலியுறுத்திய போராட்டக்காரர்கள், இல்லையெனில் இதன் விளைவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும், என்றனர்.



இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு இளைஞர் பேரவை தலைவருமான தனியரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது :- பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், ஒருவார காலத்திற்குள் விடுதலை செய்ய வாய்ப்புள்ளது. மேலும், 7 பேர் விடுதலைக்கான வாய்ப்பு நெருங்கி வருகிறது. எழுவர் விடுதலையை எதிர்நோக்கி 7 கோடி தமிழர்களும் காத்திருக்கின்றனர். தமிழக ஆளுநர் விடுதலை கோப்பில் விரைவில் கையெழுத்திடுவார். இல்லையெனில் அனைத்து கட்சிகள் சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடைபெறும். 7 பேரின் விடுதலைக்காக அ.தி.மு.க., அரசு மத்திய பா.ஜ.க., அரசிற்கு அழுத்தம் தர வேண்டும், எனத் தெரிவித்தார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...