இந்திய கப்பற்படை பெண் அதிகாரியை கவுரவித்த இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு

கோவை : இந்திய கப்பற்படையைச் சேர்ந்த அதிகாரி சுவாதிக்கு இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் பெண்கள் அமைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.


கோவை : இந்திய கப்பற்படையைச் சேர்ந்த அதிகாரி சுவாதிக்கு இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் பெண்கள் அமைப்பு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

ஓட்டல் ரெசிடென்சியில் இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் பெண்கள் அமைப்பு சார்பில் பெண்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. 



இந்த நிகழ்ச்சியில் கப்பற்படையில் இணைந்து 8 மாதங்களாக பணியாற்றி வரும் இந்திய கப்பற்படையைச் சேர்ந்த அதிகாரி சுவாதி உள்பட 6 பெண் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

இதில் கமாண்டர் பி. சுவாதி பேசியதாவது :- நாட்டிற்காக சேவை செய்ய பாலினம் ஒரு தடையில்லை. பெண்களால் எந்த நிலையையும் எட்ட முடியும். மேலும், எப்படிபட்ட சூழ்நிலைகளையும் கையாளும் நம்பிக்கை ஏற்படும். நான் உள்பட 6 பெண்கள் ஆசிய அளவில் முதல் பெண்கள் ராணுவ குழு என்ற பெருமையை பெற்றுள்ளோம். 



இந்தக் குழு, ஐ.என்.எஸ்.வி. தைரினி கப்பலில் உலகளவில் வலம் வந்து கொண்டிருக்கிறது. மேலும், பல்வேறு காலநிலைகளில் ஆண்டுக்கு 254 நாட்கள் கடலில் 21,600 மைல் தொலைவில் 8 மாதங்களாக பணியாற்றினோம். கடந்த 2017-ம் ஆண்டு செப்., 10-ம் நாள் கோவாவில் தொடங்கிய எங்களது பயணம் கடந்த ஆண்டு மே மாதம் 21-ம் தேதி மீண்டும் கோவாவிலேயே முடிந்தது, என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...