கோவை அரசியல் எழுச்சி மாநாட்டில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவை : கோவையில் இடதுசாரிகள் சார்பில் நடைபெற்ற அரசியல் எழுச்சி மாநாட்டில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை : கோவையில் இடதுசாரிகள் சார்பில் நடைபெற்ற அரசியல் எழுச்சி மாநாட்டில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இந்தியாவை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் அரசியல் எழுச்சி மாநாடு இன்று மாலை கொடிசியா அரங்கம் அருகில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. 

இம்மாநாட்டில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வாசித்தார். முதல் தீர்மானமாக, புல்வாமாவில் மரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

2-வது, தீர்மானமாக, பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ள காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக அழித்ததற்காக விமான படையின் அதிரடி தாக்குதலுக்கு பாராட்டு தெரிவிப்பதோடு, காஷ்மீர் பிரச்சினையில் ஆயுதங்கள் மூலம் தீர்வு என்று ஆகாமல் அரசியல் ரீதியாக தீர்வு காண்பது தான் அமைதிக்கும், தொடர் முன்னேற்றதிற்கும் வழிவகையாக அமையும் என்பதினை மக்களின் கவனதிற்கு கொண்டு வருவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் வளர்ச்சி, முன்னேற்றம், நிர்வாகத்தில் ஊழலற்ற வெளிப்படைதன்மை என்ற முழக்கத்துடன் பிரதமர் மோடி முன்னிறுத்தப்பட்டார். ஆனால், வளர்ச்சி என்பது கார்பரேட் கம்பெனிகள் தான் பலனடைந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் என சாமானிய பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.45 வருட வரலாற்றில் இல்லாத வேலையின்மை நாட்டின் ஒருமைப்பாட்டை காக்க பா.ஜ.க வையும் அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வினர் மதவெறி, சாதிவெறி, பணவெறி, பதவிவெறி சக்திகளை தோற்கடித்து மக்களவை தேர்தலில் மதசார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி கட்சிக்கு வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...