அதிகாரிகள்தான் அடிக்கடி மாறுகின்றனர், தீர்வு எட்டப்படவில்லை : கோவை விமான நிலைய விரிவாக்கதிற்கு இடம் கொடுத்தவர்கள் குமுறல்

கோவை : கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான இட கையகப்படுத்தும் விவகாரத்தில் அதிகாரிகள் தான் அடிக்கடி மாறி வருவதாகவும், ஆனால் பிரச்சனைக்கு இதுவரை எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை என விமான நிலைய விரிவாக்கதிற்கு இடம் கொடுத்தவர்கள் குமுறுகின்றனர்.

கோவை : கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கான இட கையகப்படுத்தும் விவகாரத்தில் அதிகாரிகள் தான் அடிக்கடி மாறி வருவதாகவும், ஆனால் பிரச்சனைக்கு இதுவரை எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை என விமான நிலைய விரிவாக்கதிற்கு இடம் கொடுத்தவர்கள் குமுறுகின்றனர். 

கோவை விமான நிலைய விரிவாக்கதிற்கு காளப்பட்டி கிராமம், நீலிக்கோணாம்பாளையம், சிங்காநல்லூர் பகுதிகளில் 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி அதற்கான இழப்பீடு தொகை வழங்கப்படும் என தெரிவிக்கபட்டு இருந்தது. இதில், ஒரு சிலர் விலை குறைவாக உள்ளது என கூறி வந்தனர். விவசாய நிலங்களுக்கு ரூ. 900-மும், தொழில் நிறுவன இடங்களுக்கு ரூ. 1,500-ம், அப்பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளை பொதுபணித்துறை மூலம் அளவீடு செய்யபட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கபட்டு இருந்தது.

மேலும், நியாயமான விலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பலர் கடந்த ஆண்டு நிலம் கையகத்திற்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட்டனர். இந்த நிலையில், இதுவரை உரிய இழப்பீடு வழங்காமல் தங்களை அலைகழிப்பதாக நிலங்களை ஒப்படைத்த பொதுமக்கள் தெரிவித்தனர். 

மேலும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பொதுமக்கள் கூறுகையில், "கடந்த வாரம் தமிழக ஆளுநர் வருகையின் போது, விமான நிலையத்தில் நுழைய முயன்று, தங்களது பிரச்சனை குறித்து விமான நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க முயற்சி எடுத்தோம். அப்போது, பாதுகாப்பு போலீசார் எங்களை தடுத்து நிறுத்தினர். மேலும், பீளமேடு காவல் நிலையதிற்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வந்த காவல் ஆய்வாளர் இது குறித்து விசாரனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். 

அதன் பேரில், இன்று மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்துள்ளோம். இழப்பீடு வழங்கக்கூடிய அதிகாரிகள் தான் அடிக்கடி மாறி வருகின்றனர். ஆனால், இப்பிரச்சனைக்கு தீர்வு மட்டும் இதுவரை எட்டப்படவில்லை," இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...