குன்னுார் லாம்ஸ்ராக் காட்சிமுனையைக் காண சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு

நீலகிரி : விடுமுறை தினத்தை முன்னிட்டு குன்னுார் லாம்ஸ்ராக் காட்சிமுனையைக் காண அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்ததால், இத்தொழிலை நம்பியுள்ள சுற்றுலா வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி : விடுமுறை தினத்தை முன்னிட்டு குன்னுார் லாம்ஸ்ராக் காட்சிமுனையைக் காண அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை புரிந்ததால், இத்தொழிலை நம்பியுள்ள சுற்றுலா வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 



நீலகிரி மாவட்டம், குன்னுார் லாம்ஸ்ராக் காட்சிமுனையில் இருந்து பர்லியார், மேட்டுப்பாளையம், பக்காசூரன்மலை உட்பட சுற்றுப்புற பகுதிகளின் இயற்கை காட்சிகள் சுற்றுலாப்பயணிகளை வசீகரிக்கிறது. 



இதற்கு முன்பாக, மேகமூட்டம் இருக்கும் காலங்களில் இங்கிருந்து பெரும்பாலான இயற்கை காட்சிகள் ரசிக்க முடியாமல் இருந்தது. தற்போது, பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், இதன் சுற்றுப்புற பகுதிகளில், நீல வானத்துடன் கூடிய இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்து வருகிறது. 

நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் லாம்ஸ்ராக் சுற்றுலாத் தலத்தை காணாமல் செல்வதில்லை என்பதால் இங்கு எப்போதும் கணிசமான அளவு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று குவிந்த சுற்றுலாப்பயணிகளால், சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...