பிரிக்கால் விவகாரம் : ஊழியர்கள் பணி நீக்க உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை

கோவை : வேறு மாநிலங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின், பணியில் சேராத ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்களை பிரிக்கால் நிர்வாகம் பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கோவை : வேறு மாநிலங்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின், பணியில் சேராத ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்களை பிரிக்கால் நிர்வாகம் பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தில் பிரிக்கால் நிறுவனம் செயல்படுகிறது. 1,600 நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தொழிற்சங்கங்களைச் சேர்ந்த, 294 பேர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஆக., 21, முதல் வேலை நிறுத்தம் செய்தனர். 100 நாட்களுக்குப் பின் பணிக்கு வந்தவர்களுக்கு, இதே நிறுவனத்தின் பிற தொழிற்சாலைகளுக்கு, பணி மாறுதல் வழங்கப்பட்டது. அவர்கள் இதை ஏற்க மறுத்தனர். 

ஆகையால், பிரிக்கால் நிறுவனம் பணிக்கு வராத 294 தொழிலாளர்களை டிஸ்மிஸ் செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், உயர் நீதிமன்றம், அந்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. 

இதுகுறித்து பிரிக்கால் நிறுவன தரப்பில், வரும் பிப்., 27ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது, பிரிக்கால் நிறுவனம் தடைக்கு எதிராக மனு தாக்கல் செய்யும், எனக் கூறப்பட்டது. 

"நீதிமன்ற உத்தரவு பிப்.,27 வரை இருக்கும் காரணத்தால் நிறுவனம் ஊழியர்களுக்கு அதுவரை ஊதியம் வழங்க வேண்டும். நிர்வாகம், இது போன்ற பணி நீக்க முடிவுகளை எடுக்க முடியாது. நாங்கள் பிப்.,27 வரை, நீதிமன்றத்தின் முடிவுகளைத் தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறோம்," என்றார் குமாரசாமி, தேசிய தலைவர், ஏ.ஐ.சி.சி.டி.யூ. தொழிற்சங்கம்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...