எமரால்டில் ரூ.18.5 கோடியில் அரசு ஆஸ்பத்திரி கட்டுமான பணிகள் தீவிரம்

நீலகிரி : உதகை அருகே எமரால்டில் ரூ.18.5 கோடியில் நடைபெறும் அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீலகிரி : உதகை அருகே எமரால்டில் ரூ.18.5 கோடியில் நடைபெறும் அரசு மருத்துவமனை கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நீலகிரி, உதகை  அருகே உள்ளது எமரால்டு கிராமம். இந்த கிராமத்தை சுற்றி அட்டுபாயில், அண்ணா நகர், எமரால்டு வேலி, சுரேந்திர நகர், பேலிதளா, கோத்தகண்டிமட்டம், நேரு நகர், நேரு கண்டி, லாரன்ஸ், காந்தி கண்டி, அவலாஞ்சி உள்பட 30-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. மேல் குறிப்பிட்ட கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 

மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் நோய்வாய்ப்பட்டால் சிகிச்சைக்காக 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உதகைக்கு  சென்று வருகின்றனர். கூலி தொழிலாளர்களான இவர்களால் தனியார் மருத்துவமனையை நாட இயலவில்லை. இதனால் பல்வேறு உயிரிழப்புகளை இப்பகுதி மக்கள் சந்திக்க நேரிடுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு எமரால்டு பகுதியில் அரசு மருத்துவமனை கட்ட வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் நீண்ட காலமாக தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எமரால்டு பகுதியில் 50 படுக்கை வசதியுடன் கூடிய புதிய மருத்துமனையினைக்  கட்ட ரூ.18 கோடியே 54 லட்சம் நிதியைத் தமிழக அரசு ஒதுக்கியது. அதன் பின்னர் எமரால்டு காவல் நிலையம் பின்புறம் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு புதிய அரசு மருத்துவமனை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

மேலும், 50 படுக்கை வசதி மட்டுமின்றி ஈ.சி.ஜி, எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை மையம், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என தனித்தனி வார்டுகள், வாகன பார்க்கிங், பிணவறை உள்பட பல்வேறு வசதிகளுடன் 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் புதிய அரசு மருத்துவமனை அமைய உள்ளது. இதன் கட்டுமான பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்றும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...