கோவை : தன்னைக் காதலித்து ஏமாற்றிய காதலி மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இளைஞர் ஒருவர் அழுது புலம்பியதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த எம்.இம்மானுவேல் (27), கடந்த 5 வருடங்களாக தன்னுடன் நெருக்கமாகப் பழகிய காதலி தன்னை ஏமாற்றிச் சென்றுவிட்டதால் மன உளைச்சலில் இருப்பதாகவும், இதுகுறித்து காவல்துறையிடம் புகாரளித்தும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அழுது புலம்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இது குறித்து இம்மானுவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது ;- ஐந்து வருடங்களாகக் காதலித்த பெண்ணை 2017 -ம் ஆண்டு திருமணம் செய்தேன். திருமணத்தை சட்டப்படி பதிவு செய்யவில்லை, ஆனால், அவர் என்னிடம் நெருங்கிப் பழகியதற்கான சான்றுகள் அனைத்தும் என்னிடம் உள்ளது. திருமணம் ஆன சில நாட்களில் அவர் என்னை பிரிந்துவிட்டார். அவரின் குடும்பத்தார் பேச்சு வார்த்தைக்காக என்னை அழைத்து, பின்பு அடித்துத் துன்புறுத்தினர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் புகாராக தெரிவித்தும், என்னை காதலித்து ஏமாற்றியவர் மீதும், தாக்கியவர்கள் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், மனதளவும் உடலளவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, என் காதலி மற்றும் குடும்பத்தினர் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.