நீலகிரி : கடந்த சில நாட்களுக்கு முன்பு கோத்தகிரி விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பொங்கல் விடுமுறையைக் கொண்டாடும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு உதகை சென்றனர். காணும் பொங்கல் கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு, அவர்கள் சென்னை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் வந்த மினி வேன், மேட்டுப்பாளையம் அருகே உள்ள கோத்தகிரி முதல் கொண்டை ஊசி வளைவில் வளையும் பொழுது, எதிர்பாராதவிதமாக சுவற்றின் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக படுகாயமடைந்த சசிகுமார் (31), சுபா (24), குமார் (22), ப்ரீத்தி (18), அம்மு (40), கவிதா (34), தட்சிணாமூர்த்தி (21), அபிநயா (14), அருள்குமார் (42), டிராவிட் (18), தனுஷ் (15), ஜோதிகா (16), ரவி (51), சரளா (40), ராஜா (48), ரவி (47), சங்கீதா (36), ஸ்ரீலதா (19) ஆகியோரை நான்கு 108 ஆம்புலன்ஸ்களில் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குமார் என்ற இளைஞர் நேற்று மாலை சுமார் 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, கோவை அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால்தான் இளைஞர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.