திருப்பூரில் விபத்து ஏற்படுத்தும் பாறைக்குழியை மூடக் கோரி சாலை மறியல் போராட்டம்

திருப்பூர் : வெள்ளியங்காடு பகுதியில் விபத்து ஏற்படுத்தும் பாறைக்குழியை மூடுதல் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருப்பூர் : வெள்ளியங்காடு பகுதியில் விபத்து ஏற்படுத்தும் பாறைக்குழியை மூடுதல் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் இருந்த பாறைக்குழியில் மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இதனை அந்த பகுதிகள் மக்கள் கடுமையாக எதிர்த்ததையொட்டி குப்பைகள் கொட்டுவதை மாநகராட்சி நிறுத்தியது. 



இந்நிலையில், விபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ள பாறைக்குழியை மணல் கொட்டி மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. திருப்பூர் வெள்ளியங்காடு சாலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் முறையாக குடிநீர் விநியோகம், சாலை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டன. 



இந்நிலையில், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட முயன்ற மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நம்பிய பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இதற்கிடையே, சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...