விநாயகனைத் தொடர்ந்து சின்னத்தம்பிக்கு குறி வைக்கும் வனத்துறையினர்

கோவை : கடந்த சில வாரங்களுக்கும் மேல் தடாகம் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் விநாயகன் மற்றும் சின்னதம்பியை வெளியேற்றும் முயற்சி நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில், விவசாயிகள் கொடுத்த அதிக அழுத்தம் காரணமாக காட்டு யானை விநாயகனைப் பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

கோவை : கடந்த சில வாரங்களுக்கும் மேல் தடாகம் பகுதியில் நுழைந்த காட்டு யானைகள் விநாயகன் மற்றும் சின்னதம்பியை வெளியேற்றும் முயற்சி நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில், விவசாயிகள் கொடுத்த அதிக அழுத்தம் காரணமாக காட்டு யானை விநாயகனைப் பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

இதையடுத்து, தடாகம் பகுதியில் பயிர் சேதம் விளைவித்த விநாயகம் வனத்துறையினால் பிடிக்கப்பட்டு முதுமலை வனப்பகுதிக்குள் விடப்பட்டது. அடுத்ததாக, வனத்துறையினரின் குறி சின்னத்தம்பி மீது திரும்பியுள்ளது. 

இதுகுறித்து கோவை வனப்பகுதியின் முதன்மை வனப்பாதுகாவலரும் முதுமலை புலிகள் காப்பகத்தின் இயக்குனருமான தீபக் ஶ்ரீவத்சவா கூறுகையில், "மூத்த யானையான விநாயகனைப் பிடித்ததால், அதனை விட எடையிலும், வயதிலும் குறைந்த சின்னதம்பியை பிடிப்பது எளிதாக இருக்கும். 

விநாயகன் தான் ஊருக்குள் நுழைந்து பயிர் சேதத்தை ஏற்படுத்தித் திரியும் சின்னத்தம்பி போன்ற யானைகளுக்குத் தலைவனாக இருக்கும் என தோன்றுகிறது. ஒருவேளை, விநாயகன் மற்ற யானைகளுக்கு உதவியிருந்தால், அதன் இடமாற்றம் மற்ற யானைகளுக்கு வனப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்குத் தயக்கத்தை ஏற்படுத்தும்," என்றார். 



"யானைகளைப் பிடிப்பதற்கு எங்களுக்கு விருப்பம் இல்லை. இந்த பிரச்சனை தீவிரமாக இருந்ததாலும், எங்களுக்கு கொடுக்கப்பட்ட அளவுக்கதிகமான அழுத்தமும், மனித வாழிடங்களில் அடுத்தடுத்து யானைகள் வந்து தொந்தரவு செய்ததுமே விநாயகனை வெளியேற்றியதற்கு காரணம். ஆனால், சின்னத்தம்பியை அப்படி பிடிக்க போவதில்லை. 

யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பாணி சரியான தேர்வல்ல. எனவே, சின்னதம்பியை பிடிக்கும் முறையில் வேறு வகை முயற்சிகளில் ஈடுபட உள்ளோம்" என்றார் தீபக் ஶ்ரீவத்சவா. 

இரண்டு யானைகளையும் வெளியேற்றும் உத்தரவு வன அதிகாரிகளுக்குக் கிடைத்த போதும், இரண்டையும் இடமாற்றம் செய்யும் திட்டத்தில் அதிகாரிகளுக்கு உடன்பாடில்லை. ஏனென்றால், விநாயகனுக்கு பயன்படுத்திய எதிர்மறை அணுகல் முறையில், கும்கி யானைகளால் காட்டு யானையுடன் சண்டையிட்டு தாக்கு பிடிக்க முடியவில்லை. 

சுமார் 4 முதல் 5 டன் எடையுடன், மதம் பிடித்திருந்த விநாயகனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அனுப்பப்பட்ட கும்கிகளுள் ஒன்றான விஜய், விநாயகனின் பிளிறல் சத்ததிற்கே பயந்து பின் வாங்கிவிட்டது. அந்த அளவுக்கு காட்டு யானைகள் வலிமை வாய்ந்தவை.

இருப்பினும், இது போன்ற பிரச்சனைகள் சின்னத்தம்பியை வெளியேற்றுவதில் வர வாய்ப்பு குறைவு. அளவிலும், வயதிலும் விநாயத்தைவிட சின்னத்தம்பி இளமையானது. எனவே, கும்கி யானைகளான விஜய், சேரன், பொம்மன் ஆகியவற்றால் சின்னத்தம்பியை கையாள முடியும் என வன அதிகாரிகள் நம்புகின்றனர்.

இதன்படி, குறைவான அளவில் மயக்க மருந்தைச் செலுத்தி கும்கிகளை விட்டு சண்டை செய்யும் படி சூழல் உருவாக்கப்பட்டு சின்னத்தம்பி காட்டுக்குள் அனுப்பி வைக்கப்படும். இதனால் மீண்டும் காட்டு யானைகள் விளைநிலங்களைச் சேதப்படுத்துவதை தவிர்க்க முடியும். 

இதை மேற்கொள்ளாத பட்சத்தில், சின்னத்தம்பியின் குணத்தை மாற்றி காட்டுக்குள்ளே இருக்க பழக்கி விடும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். இது போன்று சின்னத்தம்பியின் நடவடிக்கையை மாற்றி பயிர் சேதத்தை தடுக்க முடியவில்லை எனில் அதனை அப்புறப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர். 

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...