திருப்பூர் : திருப்பூர் மாவட்ட நிறுவனங்கள் மற்றும் வர்த்தகர்களின் மேம்பாடு குறித்த கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் எம்.பி சத்தியபாமா நேற்று ஒப்படைத்தார்.

திருப்பூர் மாவட்டம் பின்னலாடைத் தொழிலில் சிறந்து விளங்கும் நகரமாகும். ஆனால், தொடர்ந்து பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற நடவடிக்கைகளால் அதன் வளர்ச்சி சற்று நடுக்கம் கண்டது. அதனைச் சரிசெய்யும் வகையில் திருப்பூர் எம்.பி சத்தியபமா சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நலனுக்காகவும், ஏற்றுமதியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகையை திரும்பப் பெறுவதற்கான அனுமதி உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய இரு கடிதங்களை மத்திய நிதி அமைச்சரிடம் கொடுத்தார்.

இந்நிலையில், ஜி.எஸ்.டி தொகை செலுத்துவது, ஆர்.ஒ.எஸ்.எல் விகிதம் குறைவு, காலதாமதமான பணி ஆகியவற்றினால் வங்கிகளிடம் பெற்ற கடனைச் செலுத்துவதில் சிரமங்களைச் சந்தித்து வருகின்றன. எனவே, முதல் கடிதத்தில் , சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடன் கால அவகாசத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கவும், அவற்றுக்கான பிரத்யேக பாசல் (BASEL3) விதிமுறைகளுக்குப் பதிலாக உரிய திட்டத்தை வகுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
மேலும், வாராக்கடன் அளிப்பதற்கான கால அவகாசத்தை வரும் டிச. 31 -ம் தேதி வரையில் 90 நாட்கள் என வகுத்திருப்பதை 90 நாட்களில் இருந்து 180 நாட்கள் வரை மாற்ற வேண்டும் எனவும் ஜி.எஸ்.டி விதிமுறைகளின் கீழ் நிலைபெற அதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, 2 -வது கடிதத்தில், இறக்குமதி விபரங்களை சமர்ப்பிக்கும் ஏற்றுமதியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி தொகையை பெறுவதற்கான அனுமதியும், ஜிஎஸ்டி தொகையை திரும்பப் பெறும் விவரங்களையும் இணையம் மூலமாகத் தாக்கல் செய்யும் வசதிக்கு அனுமதி அளிக்குமாறு கோரி குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, மனுவை பெற்றுக் கொண்ட மத்திய நிதி அமைச்சர், விரைவில் அதுகுறித்து பரிசீலனை செய்து திட்டங்களை செயல்படுத்துவதற்கான பதிலை தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.