கோவை : அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருந்த 80-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டன.
கோவை : அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருந்த 80-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டன.
கோவையில் குடிசை வாரியம் மூலம் மாற்றுக் குடியிருப்புகள் அமைக்கும் திட்டத்தின் பணிகள் தொடங்கியது. இதையெடுத்து, சங்கனூர் பள்ளம் பகுதியிலிருக்கும் ஐ.ஆர்.எஸ். சந்து பகுதியில் ஆக்கிரமிப்பு செய்திருந்த 86 வீடுகள் மாவட்ட ஆணையாளர் உத்தரவின் பேரில் அகற்றப்பட்டன. இந்த வீடுகள் குடிசைமாற்று வாரியம் மூலம் மாற்று இடமான கீரணத்தம் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி நகரமைப்பு அலுவலர் விமலா, மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.