சூலூர் சுற்றுவட்டார கோவில்களில் கைவரிசை: கொள்ளையர்களை மடக்கி பிடித்த தனிப்படை போலீசார்

கோவை: சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நுழைந்து சிலைகள், தங்க நகைகளை கொள்ளையடித்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கோவை: சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நுழைந்து சிலைகள், தங்க நகைகளை கொள்ளையடித்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சூலூர், பல்லடம், காமநாயக்கன்பாளையம், மங்களம் மற்றும் சுல்தான் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 9-ம் தேதி முதல் தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறியது. இரவு நேரங்களில் கோவில்களில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சிலைகள், தங்க நகைகள், வெள்ளி மற்றும் பித்தளை பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக, அப்பகுதியினர் கோவை மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில், சூலூர் காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜா, உதவி ஆய்வாளர்கள் லெனின் அப்பாதுரை, அருண், ரத்தினகுமார், ஜெயகாந்த் மற்றும் தலைமை காவலர்கள் என ஒரு தனிப்படையை அமைத்தார் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன்.

இந்த தனிப்படை போலீசார், கொள்ளை போன கோவில் நிர்வாகிகளிடமும், அப்பகுதி மக்களிடமும் துரித கதியில் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கோவில்களை இரவு நேரங்களில் ரகசியமாகக் கண்காணித்தும் வந்தனர். இந்த சூழலில், காசிகவுண்டன்புதூர் பிரிவில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணியளவில் ரோந்து சென்றனர்.

அப்போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது, வாகனத்தில் வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகமடைந்தனர். தொடர்ந்து அவரை சூலூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவர், அப்பநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த வண்ணப்பன் (52) என்பதும், கூட்டாளிகளுடன் சேர்ந்து கோவில்களில் கொள்ளையடித்ததும் தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில், முருகேஷ் (48), வடிவேலன் (32), திரு மூர்த்தி (18) ஆகிய கொள்ளை கும்பலையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், அவர்கள் திருடிய 2 சிலைகள், தங்க நகைகள், வெள்ளி மற்றும் பித்தளை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5,31,800 என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து கொள்ளை கும்பலை சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். துரிதமாக செயல்பட்டு கொள்ளைக் கும்பலை பிடித்த தனிப்படையினருக்கு காவல்துறை அதிகாரிகளும், சூலூர் சுற்றுவட்டாரப்பகுதி மக்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...